/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை மருத்துவக்கல்லுாரியில் '‛எக்கோ' ஸ்கேன் எடுப்பதில் தாமதம் காத்திருந்து நோயாளிகள் அவதி
/
சிவகங்கை மருத்துவக்கல்லுாரியில் '‛எக்கோ' ஸ்கேன் எடுப்பதில் தாமதம் காத்திருந்து நோயாளிகள் அவதி
சிவகங்கை மருத்துவக்கல்லுாரியில் '‛எக்கோ' ஸ்கேன் எடுப்பதில் தாமதம் காத்திருந்து நோயாளிகள் அவதி
சிவகங்கை மருத்துவக்கல்லுாரியில் '‛எக்கோ' ஸ்கேன் எடுப்பதில் தாமதம் காத்திருந்து நோயாளிகள் அவதி
ADDED : ஏப் 17, 2024 05:41 AM
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு எக்கோ ஸ்கேன் எடுக்க தாமதம் ஏற்படுவதால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை 2012ம் ஆண்டு துவக்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் தீவிர அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, எலும்பு முறிவு பிரிவு, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட பிரிவுகள் செயல்படுகிறது.
தினசரி 1000 மேற்பட்டோர் புற நோயாளிகளாக சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாக 800 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இதயம் சம்பந்தமாக எக்கோ டெஸ்ட் செவ்வாய், வியாழன் , சனிக்கிழமை மட்டும் மதியம் ஒரு மணி வரை பார்க்கப்படுகிறது.
மற்ற நாட்களில் எக்கோ ஸ்கேன் எடுப்பதில்லை. இதயம் சம்பந்தமான சிகிச்சைக்கு நோயாளிகள் வந்தாலும் அவர்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் தான் எக்கோ எடுக்கின்றனர் கர்ப்பிணிகளுக்கு பிரசவ நேரத்திலும், 40 வயதிற்கு மேற்பட்டவருக்கு அறுவை சிகிச்சை நாட்களிலும் கட்டாயம் இதய நோய் நிபுணர் ஆலோசனை தேவைப்படுகிறது.
சிவகங்கை மருத்துவமனை மருத்துவமனையில் எக்கோ ஸ்கேன் எடுப்பதற்கு ஒரே ஒரு டாக்டர் தான் மதுரையில் இருந்து வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் வருகிறார். இவர் வரும் இந்த மூன்று நாட்களில் தான் கர்ப்பிணிகள், புற நோயாளிகள், உள்நோயாளிகள் என அனைவருக்கும் எக்கோ ஸ்கேன் பார்க்க வேண்டும்.
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அவசரத்திற்கு இதயம் சம்பந்தமான நோய்களுக்கு திடீரென்று சென்றால் எக்கோ ஸ்கேன் எடுக்க டாக்டர் இல்லை. மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு மாவட்டத்திலிருந்து பல தரப்பட்ட மக்கள் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.
இவர்கள் சிகிச்சை பெற எக்கோ எடுத்து ஆலோசனை வழங்க எப்போதும் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இதய நோய் டாக்டர் மருத்துவமனையில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருத்துவக் கண்காணிப்பாளர் குமரவேல் கூறுகையில், எக்கோ ஸ்கேன் பார்ப்பதற்கு இரண்டு டாக்டர் வேண்டும். ஒருவர் மருத்துவ விடுப்பில் உள்ளார். ஒருவர் தான் மதுரையில் இருந்து வந்து வாரத்திற்கு மூன்று நாட்கள் பார்த்துகொண்டிருக்கிறார்.
கூடுதல் டாக்டர் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து நாட்களும் எக்கோ ஸ்கேன் எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

