/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் 887 ஓட்டுச்சாவடிகளில் '‛சிசிடிவி கேமரா' பொருத்தி கண்காணிப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு
/
சிவகங்கையில் 887 ஓட்டுச்சாவடிகளில் '‛சிசிடிவி கேமரா' பொருத்தி கண்காணிப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு
சிவகங்கையில் 887 ஓட்டுச்சாவடிகளில் '‛சிசிடிவி கேமரா' பொருத்தி கண்காணிப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு
சிவகங்கையில் 887 ஓட்டுச்சாவடிகளில் '‛சிசிடிவி கேமரா' பொருத்தி கண்காணிப்பு ஆலோசனை கூட்டத்தில் முடிவு
ADDED : ஏப் 17, 2024 06:57 AM

சிவகங்கை : சிவகங்கை லோக்சபா தொகுதியில் ஏப்., 19 அன்று 1,873 ஓட்டுச்சாவடிகளில், 887 சாவடிகளில் 'சிசிடிவி' கேமரா' பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளதாக தேர்தல் சிறப்பு பார்வையாளர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர் பி.ஆர்., பாலகிருஷ்ணன், கலெக்டர் ஆஷா அஜித், புதுக்கோட்டை கலெக்டர் மெர்சி ரம்யா, தேர்தல் பார்வையாளர்கள் (பொது) எஸ்.ஹரீஸ், (போலீஸ்) ரோஹன் பி.கனேய், (செலவினம்) மனோஜ்குமார் திரிபாதி, சிவகங்கை எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ், புதுக்கோட்டை எஸ்.பி., வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துக்கழுவன், (தேர்தல்) ஜான்சன் சகாயம், தாசில்தார்கள் பங்கேற்றனர்.
887 ஓட்டுச்சாவடியில் 'சிசிடிவி கேமரா'
சிவகங்கை லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை (தனி), திருப்புத்துார், ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதியில் உள்ள 1,873 ஓட்டுச்சாவடிகளில், 887 ஓட்டுச்சாவடிகளில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன.
அந்தந்த சட்டசபை தொகுதி பாதுகாப்பு அறையில் உள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வங்கிகள் மூலம் ரூ.10 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும். வங்கி மூலம் குறைந்த அளவிலான பணத்தை அதிக நேரம் எடுப்பதை கண்காணிக்க வேண்டும். வங்கி ஏ.டி.எம்.,களுக்கு பணத்தை எடுத்து செல்லும் தனியார் வாகனங்களை மாலை 5:00 மணிக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.
டாஸ்மாக் மதுக்கடைகளில் மொத்த, சில்லரை மது விற்பனையை கண்காணிக்க வேண்டும். போலீஸ் சோதனை சாவடிகளில் கண்காணிப்பை பலப்படுத்துவதோடு, வாகன சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.
தேர்தல் பறக்கும் படை, நிலையான, வீடியோ கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட வேண்டும்.
வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கு விபரங்களை விரைந்து பெற்று, அதற்குரிய படிவங்கள் மூலம் தேர்தல் கமிஷனுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

