/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி பூங்காவில் அழகப்பர் சிலை திறப்பு
/
காரைக்குடி பூங்காவில் அழகப்பர் சிலை திறப்பு
ADDED : ஆக 01, 2024 04:40 AM

காரைக்குடி: காரைக்குடியில் அழகப்பர் முன்னாள் மாணவர்கள் சுற்றுச்சூழல் பூங்காவில் அழகப்பர் சிலை திறப்பு விழா நடந்தது. பல்கலை., துணை வேந்தர் க. ரவி தலைமையேற்றார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சிலையை திறந்து வைத்தார். அமைச்சர் பெரியகருப்பன், மாங்குடி எம்.எல்.ஏ., கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து அழகப்பா மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பல்கலை., பதிவாளர் செந்தில்ராஜன், பல்கலை., ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் சேகர், ராஜாராம் பழனிச்சாமி, தேர்வாணையர் ஜோதிபாசு, முன்னாள் அமைச்சர் தென்னவன், காரைக்குடி சேர்மன் முத்துத்துரை மற்றும் பல்கலை., பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.