/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜூன் 20ல் மானாமதுரையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறப்பு
/
ஜூன் 20ல் மானாமதுரையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறப்பு
ஜூன் 20ல் மானாமதுரையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறப்பு
ஜூன் 20ல் மானாமதுரையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் திறப்பு
ADDED : ஜூன் 19, 2024 04:58 AM
மானாமதுரை : மானாமதுரை சிவகங்கை ரோட்டில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் நாளை 20 ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு திறக்கப்பட உள்ளது.
மானாமதுரை சிவகங்கை ரோட்டில் காந்தி சிலை எதிர்புறம் நூறாண்டுகளுக்கும் மேலான பழமையான ஆங்கிலேயர் கால கட்டிடத்தில் கோர்ட் வளாகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் அண்ணாதுரை சிலை அருகே சப் கோர்ட் செயல்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து அனைத்து கோர்ட்களும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் தற்போதுள்ள கோர்ட் வளாகத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் பல கோடி ரூபாய் செலவில் கட்டும் பணி முடிவுற்றது. இந்நீதிமன்றம் நாளை20 ஆம் தேதி மாலை6:00 மணிக்கு திறக்கப்பட உள்ளது. அமைச்சர்கள் ரகுபதி, பெரியகருப்பன் திறந்து வைக்கின்றனர்.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மகேந்திரன், சுரேஷ்குமார், ஆதிகேசவலு, வடமலை, மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன், கலெக்டர் ஆஷா அஜித், கார்த்தி எம்.பி., தமிழரசி எம்.எல்.ஏ., பங்கேற்கஉள்ளனர்.
வழக்கறிஞர் சங்கதலைவர் பாலமுருகன், செயலாளர் கதிரவன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.