ADDED : மே 08, 2024 05:59 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் இடையமேலுார், சாலுார் உள்ளிட்ட சுற்று வட்டார விவசாயிகள் கோடையில் ஆண்டுதோறும் வெள்ளரிக்காய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பாண்டில் போதிய மழை இல்லாததால் வெள்ளரிக் காய் மகசூல் பாதிகப்பட்டுள்ளது.
கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சந்தையில் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய்க்கு வரவேற்பு உள்ளது. கோடைக்கு முன்னர் ஒரு கிலோ ரூ.20க்கு விற்ற வெள்ளரிக்காய் தற்போது ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப் படுகிறது.
விவசாயிகள் கூறியதாவது: சிவகங்கையில் வெள்ளரிக்காய் விவசாயம் மிகவும் குறைவு. இந்தாண்டு தண்ணீர் பற்றக்குறை காரணமாக மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. சந்தைக்கு வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது. சில வியாபாரிகள் மதுரை மார்க்கெட்டில் இருந்து வெள்ளரிக்காய் கொள்முதல் செய்து உள்ளூரில் விற்பனை செய்து வருகின்றனர். வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்தால் வெள்ளரியின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனர்.

