/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை பகுதியில் பிளக்ஸ் பேனர் அதிகரிப்பு
/
மானாமதுரை பகுதியில் பிளக்ஸ் பேனர் அதிகரிப்பு
ADDED : ஜூன் 20, 2024 04:43 AM
மானாமதுரை: தமிழகத்தில் பிளக்ஸ் பேனர்களால் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு பலர் பலியாகும் நிலையில் மானாமதுரையில் ரோட்டின் ஓரமாக ஆபத்தான முறையில் பேனர் வைக்கப்படுவதால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக அவ்வப்போது அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினர் வைக்கும் பிளக்ஸ் பேனர்களால் விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் பலியாயினர்.
மேலும் இந்த பிளக்ஸ் போர்டுகளினால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை ஐகோர்ட் தாமாக முன்வந்து பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு கட்டுப்பாடுகளை விதித்தது.இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஒரு சில நாட்கள் மட்டும் இந்த கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டன.
மீண்டும் கட்டுப்பாடுகளை மீறி போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும், விபத்துக்களை ஏற்படுத்தும் விதமாகவும்ஆங்காங்கே பிளக்ஸ் வைத்து வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலை ஓரமாகவும் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலும்ஆங்காங்கே பேனர்களை மிகப்பெரிய அளவில் வைத்து வருகின்றனர். வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.
போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் பிளக்ஸ் பேனர் கலாசாரத்தை ஒழிக்கும் வகையில் பிளக்ஸ் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

