/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில் நிலைய நடைமேடை உயரம் அதிகரிப்பு
/
ரயில் நிலைய நடைமேடை உயரம் அதிகரிப்பு
ADDED : ஜூன் 14, 2024 10:20 PM
திருப்புவனம் : கிராமப்புற ரயில் நிலையங்களில் நடைமேடைகளை உயர்த்தும்பணியை தென்னக ரயில்வே மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, கோவை சந்திப்புகளில் ரயில்வே துறை மூலம் பல்வேறு நவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கிய ரயில் சந்திப்புகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கிராமப்புற சந்திப்புகளில் எந்த வித பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் தற்போது கிராமப்புற ரயில் நிலையங்களிலும் நடைமேடைகளை உயர்த்தும் பணி நடந்து வருகிறது.
மற்ற ரயில் நிலையங்களில் பெட்டிகளிலுள்ள இறங்கும் பாதையும் நடைமேடைகளின் உயரமும் சமமாக இருக்கும், இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள், முதியோர், பயணிகள் ஏறி, இறங்கலாம். ஆனால் கிராமப்புற ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகளின் குறுகிய படிகளில் ஏறி இறங்க சிரமமாக இருந்த நிலையில் தற்போது அங்கும் நடைமேடைகளின் உயரத்தை அதிகரிக்க முடிவு செய்து பணிகள் நடந்து வருகின்றன.
திருப்புவனம் ரயில் நிலையத்தில் நடைமேடையை இடித்து அகற்றி விட்டு ஒன்றரை அடி உயரம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. மதுரை-ராமேஸ்வரம் அகல ரயில் பாதையில் ராமநாதபுர மாவட்ட ரயில் நிலைய மேடைகளின் உயரங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில் சிவகங்கை மாவட்டத்திலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.