ADDED : ஏப் 18, 2024 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனைசெய்வோர் மீதும், கடைகளில் பயன்படுத்துவோர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் பிளாஸ்டிக் பையின் பயன்பாடு குறைந்தது. தற்போது இது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை இல்லாததால் காரைக்குடி பகுதியில் பிளாஸ்டிக் பை மொத்த விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
பொது மக்கள் பிளாஸ்டிக்கை மீண்டும் அதிக அளவில் பயன்படுத்தும் சூழல் நிலவி வருகிறது. காரைக்குடி நகராட்சியில் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

