ADDED : ஆக 16, 2024 04:13 AM

மாவட்ட அளவில் மத்திய, மாநில அரசு அலுவலகம், பள்ளி, கல்லுாரிகளில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் ஆஷா அஜித் கொடியேற்றினார்.
எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் போலீஸ் அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. சுதந்திர போராட்ட தியாகிகள், அவர்களது வாரிசுகளுக்கு கலெக்டர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். வருவாய், வளர்ச்சி, ஊராட்சி துறை, போலீஸ் துறையினர் 318 பேர்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டது. விழாவில் 13 பயனாளிகளுக்கு ரூ.20.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், செந்தில்நாதன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன், கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துகழுவன், கோட்டாட்சியர்கள் சிவகங்கை விஜயகுமார், தேவகோட்டை பால்துரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. * மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்.மணிபாஸ்கரன் கொடியேற்றினார். சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் கலைசெல்வராஜ் வரவேற்றார். துணை தலைவர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர். * மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் முதல்வர் துரையரசன் கொடியேற்றினார். பேராசிரியை கலைச்செல்வி முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் பொன்மலர் வரவேற்றார். பேராசிரியர், மாணவர்கள் பங்கேற்றனர். * சிவகங்கை அல்குதா இஸ்லாமிக் சர்வதேச பள்ளியில் ஓய்வு தாசில்தார் மகேஷ்வரன் கொடியேற்றினார். பள்ளி செயலர், தாளாளர், நிர்வாக குழு உறுப்பினர்கள், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். * சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முதல்வர் சக்திவேல் கொடியேற்றினார். விரிவுரையாளர்கள் மணிகண்டன், சேவுகமூர்த்தி, பணியாளர்கள் சாந்தி, துரைசிங்கம், ஜெயப்பிரகாஷ், மாணவர்கள் பங்கேற்றனர். * சிவகங்கை டி.புதுார் ஆக்ஸ்வர்ட் மெட்ரிக் பள்ளியில் முன்னாள் ராணுவ வீரர் மணிவாசகம் கொடியேற்றினார். பள்ளி செயலர் மீனா அனந்தகுமார் முன்னிலை வகித்தார். முதல்வர் குமாரிபிரனேஷ், தர்ஷினி உள்ளிட்டோர் பங்கேற்றனர். * பாப்பாக்குடி தொடக்க பள்ளியில் ஊராட்சி தலைவர் நாச்சம்மாள் கொடியேற்றினார். தலைமை ஆசிரியை தனலட்சுமி வரவேற்றார். மேலாண்மை குழு தலைவர் பஞ்சவர்ணம், ஆசிரியர்கள் சந்திரபிரேமா, ராஜா சேவியர் தொகுத்து வழங்கினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். * சிவகங்கை ஆர்.ஆர்.ஆர்.கே., நடுநிலை பள்ளியில் பள்ளி தலைவர் சித்ரா கொடியேற்றினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுப்பம்மாள், பள்ளி செயலர் சுரேஷ் ஜான்தாமஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். * மேலவாணியங்குடி வீரமாகாளி அம்மன் மெட்ரிக் பள்ளியில் பள்ளி தாளாளர் அசோக்குமார் கொடியேற்றினார். பெக்கி அசோக்குமார், முதல்வர் செல்லமணி பங்கேற்றனர். * இடையமேலுார் விக்னேஸ்வரா வித்யாலயா பள்ளியில் முதல்வர் ஜான்சி கொடியேற்றினார். ஆசிரியை ஜெய்ஸ்ரீ வரவேற்றார். பள்ளி செயலர் ஜானகி, ஆசிரியை ஜாஸ்மி பங்கேற்றனர். * சிவகங்கை மாவட்ட நுாலகத்தில் நுாலக கண்காணிப்பாளர் சுவாமிநாதன் கொடியேற்றினார். மாவட்ட மைய நுாலகர் சாந்தி, நுால் சரிபார்ப்பு அலுவலர் வெள்ளைச்சாமி கண்ணன், எழுத்தாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* நாலுகோட்டை அரசு நடுநிலை பள்ளியில் மேலாண்மை குழு தலைவர் ஆனந்தி கொடியேற்றினார். தலைமை ஆசிரியை பாப்பா வெள்ளத்தாய் வரவேற்றார். ஆசிரியர் பஞ்சுராஜ், ஆசிரியை ஜெகதாம்பிகை, லட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கனிமொழி பங்கேற்றனர். * சோழபுரம் ரமணவிகாஸ் மேல்நிலை பள்ளியில் தாளாளர் முத்துக்கண்ணன் கொடியேற்றினார். ஆசிரியை செல்வகண்ணத்தாள் வரவேற்றார். அரசு மருத்துவமனை டாக்டர் சேதுபதி சிறப்பு வகித்தார். சோழபுரம் ஊராட்சி தலைவர் சேவியர், உதவி தலைமை ஆசிரியர் கணேஷ், ஆசிரியர் அருள் ஆரோக்கியம் பங்கேற்றனர். * சிவகங்கை விவேகானந்தா உயர்நிலை பள்ளியில் வழக்கறிஞர் சேவுகராஜ் கொடியேற்றினார். பள்ளி தாளாளர் சங்கரன், தலைமை ஆசிரியர் சுதாகர், லயன்ஸ் சுப்ரீம் சங்க மாவட்ட தலைவர் முருகன், கேபினட் செயலர் ஜான்பிரிட்டோ, சுந்தரபாண்டியன், வட்டார தலைவர் ராஜகோபால் பங்கேற்றனர். * சிவகங்கை சாய் பாலமந்திர் நர்சரி, பிரைமரி பள்ளியில் ஆசிரியை ரேணுகா கொடியேற்றினார். தலைமை ஆசிரியை கோமதிபாலா வரவேற்றார். நிர்வாகி குமார், ஆசிரியை பிரியா, இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
* சிவகங்கை ஸ்ரீபாலமுருகன் நர்சரி, பிரைமரி பள்ளியில் ஆசிரியை நீலாயதாட்சி கொடியேற்றினார். ஆசிரியை அக்சயா வரவேற்றார். ஆசிரியை ேஹமலதா, ஜீவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். * சிவகங்கை 21 ம் நுாற்றாண்டு மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 மாணவர் முகமது இர்பான் கொடியேற்றினார். பள்ளி அறங்காவலர் ராணிசத்தியமூர்த்தி தலைமை வகித்தார். முதன்மை முதல்வர் விவேகானந்தன், முதல்வர் சங்கீதா, துணை முதல்வர்கள் அருணாதேவி, கனி, தலைமை ஆசிரியை சாரதா, ஒருங்கிணைப்பாளர் பார்கவி பங்கேற்றனர். ////