sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சுதந்திர தின விழா ..

/

சுதந்திர தின விழா ..

சுதந்திர தின விழா ..

சுதந்திர தின விழா ..


ADDED : ஆக 16, 2024 04:14 AM

Google News

ADDED : ஆக 16, 2024 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜா கொடி ஏற்றினார்.

* மானாமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய தலைவர் லதா கொடியேற்றினார். துணை தலைவர் முத்துச்சாமி, பி.டி.ஓ., மாலதி, மேலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* மானாமதுரை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலர் சேதுராமு கொடியேற்றினார். நர்சுகள் வள்ளி, மாலதிக்கு சான்று வழங்கினார். அலுவலர் ஜெரால்ட் வரவேற்றார். செவிலியர் கண்காணிப்பாளர் மெர்லின் நான்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* மானாமதுரை நகராட்சியில், தலைவர் மாரியப்பன் கென்னடி கொடியேற்றினார். துணை தலைவர் பாலசுந்தரம், கமிஷனர் ரங்கநாயகி, துப்புரவு ஆய்வாளர் பாலமுருகன், நகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

* மானாமதுரை எம்.கரிசல்குளம் குட்வில் மெட்ரிக் பள்ளிகளில் தாளாளர் பூமிநாதன் கொடியேற்றினார். . ஆசிரியர் ஆனந்தகுமார் வரவேற்றார். துணை முதல்வர் லட்சுமி நன்றி கூறினார்.

* மானாமதுரை புனித ஜோசப் மெட்ரிக் பள்ளிகளில் அரசு மருத்துவர் திவாகரன் கொடியேற்றினார். பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ், தலைமை முதல்வர் அருள் ஜோஸ்பின் பெட்ஸி, முதல்வர்கள் வள்ளிமயில், ஜீவிதா மாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளியில் நிறுவனர் ராஜேஸ்வரி கொடியேற்றினார். தாளாளர் கபிலன், நிர்வாகி மீனாட்சி பங்கேற்றனர். முதல்வர் சாரதா, பொறுப்பு ஆசிரியர் பாண்டியம்மாள் பங்கேற்றனர்.

* மானாமதுரை சி.எஸ்.ஐ., உயர்நிலைப் பள்ளியில் நமச்சிவாயம் கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் பிளாரன்ஸ் பென்னட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* மானாமதுரை தயாபுரம் வ.உ.சி., தெரு நேஷனல் பப்ளிக் பள்ளியில் தலைவர் முத்தையா கொடியேற்றினார். முதல்வர் தீபிகா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார் பிரவீன்யாக், விஜயபாலா பங்கேற்றனர்.

* மேலநெட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊராட்சி தலைவர் சங்கீதா கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன், மேலாண்மை குழு தலைவர் பிரமாதி பங்கேற்றனர். ஆசிரியர் திவ்யா நன்றி கூறினார்

*மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை எம்.கே.என்., நடுநிலைப் பள்ளியில் ஊராட்சி தலைவர் முத்துலட்சுமி கொடியேற்றினார். நிர்வாக கமிட்டி தலைவர் சத்தியசீலன், தலைமை ஆசிரியர் சிவ குருநாதன், தாளாளர் அன்பழகன் பங்கேற்றனர்.

இளையான்குடி

*இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் முனியாண்டி கொடியேற்றினார். பி.டி.ஓ.,க்கள் விஜயக்குமார், முத்துக்குமரன், துணை தலைவர் தனலட்சுமி பங்கேற்றனர்.

* பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் நஜூமுதீன் கொடியேற்றினார். துணை தலைவர் இப்ராகிம், கவுன்சிலர்கள், துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை பங்கேற்றனர்.

* டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியில் சையது அபுதாகிர் கொடியேற்றினார். அப்துல் ரஜாக், சையது அபுதாகிர், தலைவர் அகமது ஜலாலுதீன், செயலாளர் ஜபருல்லாகான், பொருளாளர் அப்துல் அஹது உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

* எஸ்.காரைக்குடி ஊராட்சியில் தலைவர் குழந்தை பாண்டியன் கொடியேற்றினார். துணை தலைவர் முத்தையா, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

//






      Dinamalar
      Follow us