ADDED : ஆக 13, 2024 12:14 AM

திருப்புத்துார் : திருப்புத்துார் ஆ.பி.அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திரதினத்தை முன்னிட்டு நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அறக்கட்டளை சார்பில் சிலம்பப் போட்டிகள் நடந்தன.
போட்டியை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் துவக்கி வைத்தார். முதலில்தனிநபர் திறனுக்கான போட்டிகளில் ஆடவர்,மகளிர் வயது அடிப்படையில் பல பிரிவுகளில் நடந்தது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
முதலாவது பரிசை திருச்சி உறையூர் முத்தமிழ் சிலம்பம் குழு, இரண்டாவது பரிசு திருச்சி காட்டூர் ஐங்கரன் கலைக்கூடம், மூன்றாவது பரிசு திருச்சி அகத்தியர் சிலம்பக்கூடம் குழுவினர் பெற்றனர்.
ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்வி குழும தலைவர் ராமேஸ்வரன், மணிராஜா வீரர்களை சிறப்பித்தனர். நடுவர்களாக மதுரை மாரிமுத்து தலைமையிலான 12 பேர் பணியாற்றினர்.
சோழம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் சகாயராஜ், இளமுருகு, பூபதிராஜா, பழனிக்குமார், முத்துகுமார் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். நேதாஜி சிலம்ப பயிற்சி ஆசான், அறங்காவலர் மதிவாணன் செய்தார்.

