ADDED : ஆக 16, 2024 04:21 AM

சிவகங்கை: சுதந்திர தினத்தை முன்னிட்டு பா.ஜ., சார்பில் டூவீலர் ஊர்வலம் நடைபெற்றது.
சிவகங்கையில் நடந்த பேரணிக்கு நகர் தலைவர் உதயா தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சத்தியநாதன், பொது செயலாளர் மார்த்தாண்டன், துணை தலைவர் சுகனேஸ்வரி, ஒன்றிய தலைவர்கள் மயில்சாமி, நாட்டரசு, பில்லப்பன், முத்திருளாண்டி, மகளிர் அணி பொது செயலாளர் ேஹமமாலினி, நகர் பொது செயலாளர் பாலா, சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பா.ஜ., அலுவலகத்தில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேசிய கொடி ஏந்தி ஊர்வலம் சென்றனர்.
காரைக்குடி: மாவட்டபொது செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். நகர் தலைவர்கள் பாண்டியன், மலைக்குமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் துவக்கி வைத்தார். மாநில செயற்குழு சிதம்பரம், பொதுக்குழு காசிராஜா, ஒன்றிய தலைவர்கள் செல்வா, ராமலிங்கம் பங்கேற்றனர்.
மானாமதுரை: ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகர் தலைவர் முனியசாமி, நிர்வாகிகள் காட்டுராஜா, ராஜாதவம், கந்தசாமி, ராமலிங்கம் .ள்ளிட்டோர் பங்கேற்றனர்.
///