/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நெடுமரம் மஞ்சுவிரட்டு 39 பேர் காயம்
/
நெடுமரம் மஞ்சுவிரட்டு 39 பேர் காயம்
ADDED : மார் 31, 2025 07:08 AM
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நெடுமரத்தில் நேற்று நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 35 பேர் காயமுற்றனர்.
நெடுமரம் மலையரசி அம்மன் கோயிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 11:30 மணிக்கு தொழுவிற்கு வந்து பூஜைகள் நடத்தி மஞ்சுவிரட்டு துவங்கியது. தொழுவிற்கு வந்த 200 காளைகளில் 15 காளைகள் நிராகரிக்கப்பட்டது.
பங்கேற்க வந்த 53 மாடுபிடி வீரர்களில் 3 பேர் நிராகரிக்கப்பட்டு 50 பேர் பங்கேற்றனர். காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள் உள்பட 39 பேர் காயமுற்றனர். கட்டுமாடுகளாக 200க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது.