ADDED : மார் 28, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் இறுதியாண்டு மாணவர்களுக்கு நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி கல்லுாரி செயலாளர் செபாஸ்டின் தலைமையில் நடந்தது.
முதல்வர் ஜான் வசந்த் குமார் முன்னிலை வகித்தார். பங்கேற்ற தனியார் நிறுவனங்களின் நிர்வாகிகள் அன்ஜெஸ்குமார், ஜெபசிங் நேர்முகத் தேர்வு அணுகுமுறை குறித்து பயிற்சி அளித்தனர். ஆங்கில மொழி வளம் பற்றி விளக்கினர். துணை முதல்வர்கள், பேராசிரியர்கள், மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.