/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இருமதி மஞ்சு விரட்டு: 22 பேர் காயம்
/
இருமதி மஞ்சு விரட்டு: 22 பேர் காயம்
ADDED : மார் 01, 2025 07:29 AM

தேவகோட்டை : தேவகோட்டை தாலுகா இருமதியில் நேற்று மதியம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் 195 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
வழக்கம் போல் ஆங்காங்கே நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுமாடு அவிழ்த்து விடப்பட்டன. மஞ்சுவிரட்டில் 2 பேரை மாடுகள் குத்தி காயமடைந்ததை தொடர்ந்து சிகிச்சைக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும் 20 பேருக்கு காயம் ஏற்பட்டு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
* புளியால் அருகே சிறுகை அழகிய பொன்னாள் மற்றும் கருப்பர் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. பால்குடம், காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
இதில் 9 காளைகள் பங்கேற்றன.