/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தேரோட்டம் முடியும் வரை காத்திருந்து பெய்த மழை
/
தேரோட்டம் முடியும் வரை காத்திருந்து பெய்த மழை
ADDED : மே 21, 2024 07:17 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் தேர் நிலையை அடையும் வரை காத்திருந்து பெய்த மழையால் பக்தர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.
இங்குள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாக தேரோட்டம் நேற்று நடந்தது. சிவகங்கை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அலர்ட் விடப்பட்டிருந்தது.
நேற்று காலை முதல் மாலை வரை சிங்கம்புணரியில் மேகங்கள் திரண்டு மழை வருவதற்கான சூழல் நிலவியது. அருகே சில கி.மீ., துாரத்தில் உள்ள பகுதிகளில் பலத்த மழையும் பெய்த நிலையில் சிங்கம்புணரியில் மழை இல்லை. இதமான சூழலில் தேர் புறப்பட்டு நிலையை அடைந்தது.
நிலையை அடைந்த பிறகு சில நிமிடங்களில் மழை துவங்கி இரவு வரை தொடர்ந்தது. தேரோட்டத்தின் போது மழை பெய்யாமல் நிலைக்கு வந்த பிறகு பெய்ததால் தேரோட்டம் காண குழந்தைகளுடன் வந்திருந்த பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் சென்றனர்.

