ADDED : மே 21, 2024 07:16 AM

சிங்கம்புணரி : புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் விளையும் பலாப்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்பகுதியில் விளையும் பலா பழங்களை விவசாயிகள் நேரடியாகவே கொண்டு சென்று விற்று வருகின்றனர்.
சிங்கம்புணரியில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு வடகாடு அருகேயுள்ள வணக்கன்காடு விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் ஏராளமான பலாப்பழங்களை சிங்கம்புணரியில் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.
வெங்கட், விவசாயி: வடகாடு, வணக்கன்காடு பகுதியில் விளையும் பலாப்பழங்களை சிங்கம்புணரி திருவிழாவிற்கு கடந்த 4 வருடங்களாக கொண்டு வந்து விற்கிறோம். பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். 20க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். இரண்டு நாளில் அனைத்தும் விற்று விடும், என்றார்.

