/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஜல்லிக்கட்டு வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
/
ஜல்லிக்கட்டு வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூன் 08, 2024 05:29 AM
மதுரை : சிவகங்கை மாவட்டம்கிருங்காக்கோட்டை லோகநாதன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
கிருங்காக்கோட்டையில் ஆண்டுதோறும் வைகாசியில் கோயில் திருவிழாவையொட்டி மக்களிடம் தலைக்கட்டு வரி வசூலிக்கப்படும். கலெக்டரின் அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. வரி வசூலில் சிலர் முறைகேடு செய்தனர். ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களிடம் முறையற்ற வகையில் பணம் வசூலித்தனர். கேள்வி எழுப்பியதால் என்னை தாக்கினர்.
வைகாசிமாத திருவிழா, ஜல்லிக்கட்டில் வேறுபாடின்றி அனைவரும் பங்கேற்க வேண்டும். குழு அமைத்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கலெக்டர், சிங்கம்புணரி தாசில்தாருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன்அமர்வு: மனுவை தாசில்தார் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.