/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரேஷனில் ஜூலை பருப்பு, பாமாயில் இந்த மாதம் பெறலாம்: கலெக்டர்
/
ரேஷனில் ஜூலை பருப்பு, பாமாயில் இந்த மாதம் பெறலாம்: கலெக்டர்
ரேஷனில் ஜூலை பருப்பு, பாமாயில் இந்த மாதம் பெறலாம்: கலெக்டர்
ரேஷனில் ஜூலை பருப்பு, பாமாயில் இந்த மாதம் பெறலாம்: கலெக்டர்
ADDED : ஆக 05, 2024 10:31 PM
சிவகங்கை, - சிவகங்கை மாவட்ட ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பெறாதவர், ஆகஸ்ட் இறுதி வரை பெறலாம் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
மாவட்ட அளவில் கூட்டுறவு துறை, நுகர்பொருள் வணிப கழகத்தின் கீழ் 881 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதில், 4 லட்சத்து 18 ஆயிரத்து 582 கார்டுதாரர்கள் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். மாதந்தோறும் ரேஷன் கார்டுகளுக்கு வழங்க 327 டன் துவரம் பருப்பு, 3 லட்சத்து 16 ஆயிரத்து 649 பாக்கெட் பாமாயில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. ஜூலை மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு ஒதுக்கீடு தற்போது தான் வந்து கொண்டிருக்கின்றன. இதனால், ஜூலையில் வழங்க வேண்டிய பருப்பு, பாமாயிலை தற்போது வரை பெற முடியாமல் ரேஷன் கார்டுதாரர்கள் தவித்து வருகின்றனர்.
கலெக்டர் ஆஷா அஜித் கூறியதாவது: ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயில் பாக்கெட்களை பெறாத குடும்பத்தாரர்கள், அம்மாதத்திற்கான பாமாயில், பருப்பை ஆக., இறுதி வரை அந்தந்த பகுதி ரேஷன் கடைகளில் சென்று பெறலாம், என்றார்.