/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டரமாணிக்கம் மஞ்சுவிரட்டு ஒருவர் பலி; 70 பேர் காயம் அனுமதியில்லாததால் போலீசார் வழக்கு

ADDED : ஏப் 26, 2024 12:54 AM

திருக்கோஷ்டியூர் : திருப்புத்துார் அருகே கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மஞ்சுவிரட்டில் மாடு முட்டி ஒருவர் இறந்தார். 70க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கத்தில் மாணிக்கநாச்சியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. அதை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது. தொடர்ந்து கண்மாயில் மஞ்சுவிரட்டு நடந்தது. காலை 10:30 மணிக்கு தொழுவிலிருந்து 250க்கும் அதிகமான காளைகள் அவிழ்க்கப்பட்டன.
மேலும் தொடர்ந்து தொழுவிற்கு வெளியிலும் கட்டுமாடுகள் அவிழ்க்கப்பட்டன. சிவகங்கை,புதுக்கோட்டை,திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து காளைகள் பங்கேற்றன.
காளைகளை பிடிக்க முயன்றவர்களையும் வேடிக்கை பார்க்க வந்த பார்வையாளர்களையும் காளைகள் முட்டியதிலும் 13 வயது சிறுவன் உட்பட 70க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். அதில் படுகாயமடைந்த 25க்கும் அதிகமானோர் சிவகங்கை,காரைக்குடி அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். அதில் சிவகங்கை செல்லும் வழியில் மடைக்கரைப்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி 53, இறந்தார்.
மஞ்சுவிரட்டை முன்னிட்டு போதிய டாக்டர்கள் தயார் நிலையில் வைக்கப்படாததால் வழக்கமான பணியில் இருந்த 2 டாக்டர்களே காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.