ADDED : ஜூன் 24, 2026 08:41 PM
திருப்புத்துார்,ஜூன் 25-
கவிஞர் கண்ணதாசனின் நுாறாவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அவரது சொந்த ஊரான சிறுகூடல்பட்டியில் கவிஞர்கள்,கட்சியினர்,ரசிகர்கள்,கிராமத்தினர் அவரது சிலைக்கு அஞ்சலி செலுத்தினர்.
சிறுகூடல்பட்டி மலையரசி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் அஞ்சலி நிகழ்ச்சி துவங்கியது. கோயில் அருகில் உள்ள கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்ச்சி துவங்கியது.
தொடர்ந்து மகாலில் பாரதி இலக்கியக் கழகம், திருப்புத்துார் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு, வாசகர் வட்டம் சார்பில் அவரின் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து நூற்றாண்டு விழா மலரை எழுத்தாளர் பழனியப்பன் தலைமையில் வாசகர் வட்டத் தலைவர் ஜெயச்சந்திரன் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வெளியிட சேதுபாஸ்கரா வேளாண் கல்லூரி நிறுவனர் சேதுகுமணன்,கவிஞர் பொற்கைப் பாண்டியன் பெற்றுக்கொண்டனர். கண்ணதாசன் மகள் விசாலி, குடும்பத்தினர் பழனியப்பன், சாத்தப்பன் பங்கேற்றனர்.
கண்ணதாசன் இலக்கியப் பேரவை சார்பில் தலைவர் எஸ்.எம்.பழனியப்பன், லெனின் கம்யூ., மாநில பொதுச் செயலாளர் ஸ்டாலின், ஊர் அம்பலகாரர் வைரவன், தலைமையாசிரியர் முருகேசன் கண்ணதாசன், முன்னாள் ஊராட்சி தலைவர் மணிகண்டன், வக்கீல்கள் முருகேசன், முகமது ஷெரிப், மருது பாண்டியன் ஆகியோர் பங்கேற்றனர்.
