/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஓட்டு இயந்திரம் இடம் மாறி இருந்ததாக கார்த்தி புகார்
/
ஓட்டு இயந்திரம் இடம் மாறி இருந்ததாக கார்த்தி புகார்
ஓட்டு இயந்திரம் இடம் மாறி இருந்ததாக கார்த்தி புகார்
ஓட்டு இயந்திரம் இடம் மாறி இருந்ததாக கார்த்தி புகார்
ADDED : ஏப் 20, 2024 02:15 AM

காரைக்குடி:சிவகங்கை தொகுதி காங்., வேட்பாளராக கார்த்தி எம்.பி., போட்டியிடுகிறார். இத்தொகுதியில் 20 பேர் போட்டியிட்டதால் இரண்டு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஓட்டுச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்தன.
கார்த்தி நேற்று காரைக்குடி அருகேவுள்ள மானகிரி லெ.அரு.நடுநிலைப்பள்ளியில் ஓட்டளித்தார். அப்போது ஓட்டு இயந்திரம் இடம் மாறி இருப்பதாக அதிகாரிகளை அழைத்து அவர் புகார் செய்தார். இடது பக்கம் இருக்க வேண்டிய இயந்திரம் வலது பக்கம் இருப்பதாக புகார் எழுப்பினார். மேலும் இயந்திரத்தில் முதல் வேட்பாளர் நான் தான். இது மக்கள் மனதில் பதிந்துள்ளதால் அனைவரும் முதல் பட்டனை அழுத்துவதற்கு தான் வாய்ப்புள்ளதாக கூறினார். அதிகாரிகள் அவரை சமாதானம் செய்தனர்.