/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி அருங்காட்சியகம் முதன்மை செயலர் ஆய்வு
/
கீழடி அருங்காட்சியகம் முதன்மை செயலர் ஆய்வு
ADDED : ஏப் 27, 2024 04:22 AM
கீழடி: கீழடி அருங்காட்சியகத்தில் தமிழக அரசின் முதன்மை செயலர் உதயசந்திரன், தொல்லியல் துறை ஆணையாளர் (பொறுப்பு) சிவானந்தம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
கீழடியில் கடந்தாண்டு மார்ச் 5ம் தேதி அருங்காட்சியகத்தை முதல்வர் திறந்து வைத்தார். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் அருங்காட்சிகத்தில் சுற்றுலா பயணிகளை கவர கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இதுவரை 13 ஆயிரத்து 824 பொருட்கள் மட்டும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதல் பொருட்களை காட்சிப்படுத்த வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து நேற்று முதன்மை செயலர் உதயசந்திரன், தொல்லியல் துறை ஆணையாளர் சிவானந்தம் உள்ளிட்டோர் அருங்காட்சியகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

