/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு தடை
/
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு தடை
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு தடை
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு தடை
ADDED : மார் 09, 2025 02:49 AM
கீழடி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் திறந்த வெளி அருங்காட்சியகத்தை காண இன்று (மார்ச் 9) முதல் பார்வையாளர்களுக்கு தொல்லியல் துறை தடை விதித்துள்ளது.
கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு நடந்த இடம் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு கடந்த ஓராண்டாக பார்வையாளர்கள் தினசரி பார்வையிட்டு செல்கின்றனர். கீழடியில் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட பின் அப்படியே திறந்த வெளிஅருங்காட்சியகத்தை பார்வையிடுவதும் வழக்கம்.
7ம் கட்ட அகழாய்வு நடந்த எட்டு குழிகளில் மீன் உருவம் பதித்த உறைகிணறு, சிவப்பு நிற பானை, சாயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட சுடுமண் கிண்ணங்கள், சிறிய பானைகள், தொட்டிகள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திறந்த வெளி அருங்காட்சியகம் வரும் பார்வையாளர்கள் அருகிலேயே முதல், 2, 3, 6, 8ம் கட்ட அகழாய்வுகள் நடந்த இடம், திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றும் பணிகள் நடந்து வருவதால் பாதுகாப்பு கருதி தடை செய்யப் பட்டுள்ளது. எனவே பணிகள் முடிவடையும் வரை திறந்த வெளி அருங்காட்சியகத்தை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தொல்லியல் துறை அறிவித்ததுடன் அறிவிப்பு பலகையும் பொருத்த உள்ளது.