/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழப்பூங்குடி கோயில் முளைப்பாரி ஊர்வலம்
/
கீழப்பூங்குடி கோயில் முளைப்பாரி ஊர்வலம்
ADDED : மே 02, 2024 05:27 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே கீழப்பூங்குடி ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி உற்ஸவம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஏப்.23ல் காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. பெண்கள் கோயில் முன் கூடி கும்மியடித்து, பாட்டு பாடியும், குலவையிட்டு வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு முளைப்பாரிகளை எடுத்து வந்த கிராம மந்தையில் வைத்தனர். நேற்று காலை 8:00 மணிக்கு மந்தையில் இருந்து முளைப்பாரியை கிராமங்களில் அனைத்து வீதிகள் வழியே சென்றனர். பின்னர் கீழப்பூங்குடி ஊருணியில் கரைத்து, அம்மனுக்கு நேர்த்தி செலுத்தினர். விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

