/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் பணி: தொல்லியல் துறை துவக்கியது
/
கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் பணி: தொல்லியல் துறை துவக்கியது
கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் பணி: தொல்லியல் துறை துவக்கியது
கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் பணி: தொல்லியல் துறை துவக்கியது
ADDED : பிப் 22, 2025 02:06 AM

கீழடி:சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அகழாய்வில் கிடைத்த பண்டைய கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், கட்டடங்களை காட்சிப்படுத்த திறந்தவெளி அருங்காட்சியக பணிகளை தொல்லியல் துறையினர் துவங்கினர்.
கீழடியில் மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத்ராமகிருஷ்ணன் தலைமையில் 2015ல் தொடங்கிய அகழாய்வு பணியில் பண்டைய கால மக்கள் பயன்படுத்திய தந்தத்தாலான தாயக்கட்டை, சுடுமண் பொம்மைகள், உறைகிணறுகள், கட்டடங்கள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன. பிறகு தமிழக தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அகழாய்வு நடந்த இடங்களை திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற ரூ.17 கோடியே 44 லட்சம் ஒதுக்கப்பட்டு பணிகளை முதல்வர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்.
முதற்கட்டமாக தமிழக தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்த இடங்களை திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்ற கீழடி அகழாய்வு தள இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய்குமார் தலைமையில் தொல்லியல் ஆய்வு மாணவர்கள், 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளை நிறைவு செய்த போது வெளிப்பட்ட பொருட்களை பாலிதீன் தார்ப்பாய்களை கொண்டு மூடி அதன் மீது மண்ணை கொட்டி மூடி இருந்தனர்.
எனவே மீண்டும் பொருட்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வரும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பொருட்களை பாதுகாப்பாக வெளியே எடுத்த பின் அவற்றை சுற்றி கட்டட பணிகளை தொடங்கவும் தொல்லியல் துறை முடிவு செய்துள்ளனர்.