/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூனவயல் கருப்பு கொடி பிரச்னை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம்
/
கூனவயல் கருப்பு கொடி பிரச்னை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம்
கூனவயல் கருப்பு கொடி பிரச்னை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம்
கூனவயல் கருப்பு கொடி பிரச்னை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம்
ADDED : ஏப் 14, 2024 04:16 AM
தேவகோட்டை: கண்ணங்குடி ஒன்றியம் பூசலாகுடி ஊராட்சியைச் சேர்ந்தது கூனவயல் கிராமம். இங்கு சாலை, குடிநீர், மின்சாரம், மயானம் வசதி நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத தால் மக்கள் அவதியில் உள்ளனர்.
இதனை தினமலர் சுட்டிக்காட்டியது. கிராம வீதிகள், வீடுகளில் மக்கள் கருப்பு கொடி ஏற்றி வைத்தனர். அரசியல்வாதிகள் நுழையவும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இச்செய்தியை அறிந்த அதிகாரிகள் தேர்தல் நேரம் என்பதால் போலீசார், அதிகாரிகள் கூனவயலுக்கு சென்று பார்வையிட்டு அறிக்கை அனுப்பினர்.
இதனைத் தொடர்ந்து கண்ணங்குடி ஒன்றிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள் பார்வையிட்டனர்.
உடனடியாக மின்சாரம் பிரச்னையையும், மயானம் அமைத்து தருவதாக உறுதி கூறியதோடு, மற்ற தேவைகளை தேர்தல் முடிந்தவுடன் செய்து தருவதாக கூறினர்.
செய்து தருவதாக கூறி சென்ற அதிகாரிகள் நேற்று மதியம் வரை எட்டிக்கூட பார்க்கவில்லை. தேர்தலும் நெருங்கிவிட்டது.
இந்நிலையில் அதிகாரிகளின் அலட்சியம் கிராமத்தினரை கோபமடைய செய்துள்ளது.
100 சதவிகிதம் ஓட்டு பதிவை வலியுறுத்தி ஊர்வலம் செல்லும் அதிகாரிகள் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முன்வராததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்

