/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
/
மாவட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED : ஆக 27, 2024 06:11 AM

மானாமதுரை, : மானாமதுரை அருகே உள்ள அன்னவாசல் புதுார்கிராமத்தில் அமைந்துள்ளகோபால கிருஷ்ணர் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு சுதர்சன ஹோமம்,கோமாதா பூஜை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 10:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.மதியம் அன்னதானம் நடைபெற்றது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமான குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்திருந்தனர்.
மாலை 6:00 மணிக்கு கோயில் வளாகத்தில் விவசாயம் செழிக்க வேண்டியும், உலக நன்மைக்காகவும் 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோபால கிருஷ்ணர் திருக்கோயில் நிர்வாக கமிட்டி, யாதவ இளைஞர் சங்கம் மற்றும்கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
* மானாமதுரை நகராட்சி அலுவலகம் அருகே சித்தர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.
* மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளிகளின் சார்பாக நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாணவர்கள் கிருஷ்ணர்,ராதை வேடமணிந்து வந்தனர். நிறுவனர் ராஜேஸ்வரி, கபிலன், நிர்வாகி மீனாட்சி, முதல்வர் சாரதா மற்றும்ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
* தேவகோட்டை யாதவா நர்சரி தொடக்கப்பள்ளியில் யாதவ சங்கம் கல்வி அறக்கட்டளை சார்பில் கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் உள்ள கிருஷ்ணருக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியில் சங்க தலைவர் ராஜேந்திரன், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சந்திரசேகர்,முன்னாள் நகராட்சி தலைவர் வேலுச்சாமி உட்பட முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.