ADDED : ஏப் 27, 2024 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.ஐ.ஜி., துரை தலைமை வகித்தார். எஸ்.பி., டோங்க்ரே பிரவீன் உமேஷ் முன்னிலை வகித்தார்.
அனைத்து கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி.,க்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதியப்பட்டு குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தில் முறையாக தண்டனை பெற்றுத்தர சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு டி.ஐ.ஜி., துரை பாராட்டு சான்று வழங்கினார்.
எஸ்.வி., மங்கலம் தலைமை காவலர் மூர்த்தி, சிவகங்கை மகளிர் ஸ்டேஷன் போலீசார் கோமதி, பார்வதி ஆகியோருக்கு  பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், எஸ்.ஐ., சரவண போஸ், பழனிவேல் உடனிருந்தனர்.

