/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்டதேவியில் பணி செய்த போலீசாருக்கு பாராட்டு
/
கண்டதேவியில் பணி செய்த போலீசாருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 27, 2024 11:45 PM
சிவகங்கை : கண்டதேவி தேரோட்டம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளில் சிறப்பாக பணியாற்றிய போலீசாரை பாராட்டி எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் சான்று வழங்கினார். தேவகோட்டை அருகே கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயில் தேரோட்டம் 18 ஆண்டுகளுக்கு பிறகு எவ்வித அசம்பாவிதமின்றி நடந்தது.
பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கும், பள்ளத்துார் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் மற்றும் இளையான்குடி, காரைக்குடி வடக்கு, அழகப்பாபரம் போலீஸ் ஸ்டேஷன் குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைந்து கைது செய்து சிறப்பாக பணிபுரிந்த தேவகோட்டை டி.எஸ்.பி., பார்த்திபன், காரைக்குடி டி.எஸ்.பி., பிரகாஷ், காரைக்குடி வடக்கு இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வக்குமார், தேவகோட்டை தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன், தேவகோட்டை நகர் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் கீதாலெட்சுமி, தனிபிரிவு எஸ்.ஐ., சரவணபோஸ், சைபர் கிரைம் எஸ்.ஐ., முருகானந்தம், எஸ்.ஐ.,க்கள் மலைச்சாமி, சரவணக்குமார், நமச்சிவாயம், ரூபன்ராஜ் உள்ளிட்ட 64 போலீசாருக்கு பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.

