ADDED : ஜூன் 13, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கோட்டையிருப்பில் செல்வவிநாயகர், சூரமாகாளி அம்மன் கோயில் கும்பாபிேஷகம் நடந்தது.
இக்கோயிலில் திருப்பணிகள் நடந்து கும்பாபிேஷகத்தை முன்னிட்டு ஜூன் 10 காலையில் யாகசாலை பூஜைகள் துவங்கி மாலையில் முதற்கால யாக பூஜைகள் நடந்தன. மறுநாள் காலையில் 2ம் காலமும், மாலையில் 3ம் காலயாக பூஜைகளும் நடந்தன. நேற்று காலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கி காலை 9:10 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.
பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி விமானங்களுக்கு சென்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்களால் பூஜை நடந்து மூலவர் விமான கலசங்களுக்கு காலை 9:20 மணிக்கு புனித நீரால் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகளை மேலமாகாணம் கணேசக்குருக்கள் உள்ளிட்ட சிவாச்சார்யார்கள் செய்தனர்.