ADDED : ஆக 23, 2024 04:22 AM

காரைக்குடி: குன்றக்குடியில் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமி 699 ஆம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில், திருவண்ணாமலை ஆதினம் தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில், புதிய அன்னதான கட்டடம் திறப்பு விழா, நுால் வெளியீட்டு விழா மற்றும் பாராட்டு விழா நடந்தது.
புதிய கட்டட திறப்பு விழாவில், குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையேற்றார். மதுரை ஆதினம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார், கார்த்தி எம்.பி., கலந்து கொண்டனர். எஸ்.ஆர்.எம்., பல்கலை நிறுவனர் ரா. பாரிவேந்தர் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகள் எழுதிய மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்ற நுாலை முன்னாள் நீதிபதி மெ. சொக்கலிங்கம் வெளியிட்டார். தொடர்ந்து நடந்த பாராட்டு விழாவில், ரா. பாரிவேந்தருக்கு திருப்பணி செம்மல் எனும் பட்டம் வழங்கப்பட்டது.

