/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
l ↓பிரான்மலை ரோட்டில் வாகன ஓட்டிகள் l ↓ஆபத்தான வளைவுகளுடன் குறுகலான ரோடு
/
l ↓பிரான்மலை ரோட்டில் வாகன ஓட்டிகள் l ↓ஆபத்தான வளைவுகளுடன் குறுகலான ரோடு
l ↓பிரான்மலை ரோட்டில் வாகன ஓட்டிகள் l ↓ஆபத்தான வளைவுகளுடன் குறுகலான ரோடு
l ↓பிரான்மலை ரோட்டில் வாகன ஓட்டிகள் l ↓ஆபத்தான வளைவுகளுடன் குறுகலான ரோடு
ADDED : மே 05, 2024 06:39 AM

மாவட்டத்தில் முக்கிய ஆன்மிக மற்றும் சுற்றுலா பகுதியாக விளங்கும் பிரான்மலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கார், வேன், பஸ்களில் வந்து செல்கின்றனர்.
பிரான்மலையிலிருந்து முக்கிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மிகவும் குறுகியதாகவும் ஆபத்தான வளைவு கொண்டதாகவும் உள்ளன.
பல இடங்களில் சாலையோரத்தில் பள்ளமும், ஆழமான கிணறுகளும் நிறைந்து பயத்தை ஏற்படுத்துவதால் வாகன ஓட்டிகள் பலரும் பிரான்மலைக்கு வரவே தயங்குகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் இச்சாலையில் வரும் வாகனங்களுக்கு வழிவிட போதிய இடமில்லாமல் ரோட்டை விட்டு வாகனங்களை கீழே இறக்க வேண்டி உள்ளது. சற்று அசந்தாலும் மிகப்பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.
முட்டாக்கட்டி, வேங்கைபட்டி, செல்லியம்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பிரான்மலைக்கு தினமும் அதிக அளவில்வாகனங்கள் வந்து சென்றும் இச்சாலைகளை அகலப்படுத்தி சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை கண்டு கொள்ளவில்லை. நிதிச் சுமையை காரணம் காட்டி சாலை அகலப்படுத்தும் பணியை தாமதப்படுத்துகின்றனர்.
அவ்வப்போது சிறிய விபத்து முதல் உயிர்ப்பலி வரை அதிகம் நடந்திருக்கிறது. அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன் பிரான்மலைக்கு வரும் அனைத்து சாலைகளையும் அகலப்படுத்தி சாலையோர கிணறுகள் அருகே தடுப்பு அமைக்க வேண்டும்.