/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தரையில் அமர்ந்து உணவருந்தும் அவலம்
/
சிவகங்கை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தரையில் அமர்ந்து உணவருந்தும் அவலம்
சிவகங்கை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தரையில் அமர்ந்து உணவருந்தும் அவலம்
சிவகங்கை கலெக்டர் அலுவலக ஊழியர்கள் தரையில் அமர்ந்து உணவருந்தும் அவலம்
ADDED : மார் 02, 2025 05:36 AM

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடக்கும் குறைதீர் கூட்டம்,மாதம் ஒரு நாள் நடத்தும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட கூட்டத்திற்காக பொது மக்கள் கலெக்டர் அலுவலகம் வருகின்றனர்.
பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் இந்த அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட அலுவலர், ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
ஆண், பெண் ஊழியர்கள் மதிய உணவு சாப்பிட குடிநீர், டேபிள் வசதியுடன் கூடிய 'பொதுவான அறை' இல்லை. ஊழியர்கள் பொதுமக்கள் செல்லும் நடைபாதையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்டுஉள்ளனர்.
அதேபோன்று கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் வரும் மக்கள், ஊழியர்களுக்கென போதிய குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பொருத்தப்படவில்லை. இதனால், கோடை வெயில் காலத்தில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள், ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
மக்களின் குறைகளை தீர்க்க தான் நாங்களே பணி செய்கிறோம். ஆனால், எங்களுக்கான குறைகளை யாரிடம் போய் சொல்வது என தெரியவில்லை.
ஊழியர்களின் நலன் கருதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது உணவு சாப்பிடும் அறை கட்டுவதற்கான நடவடிக்கையை கலெக்டர்ஆஷா அஜித் எடுக்க வேண்டும் என ஊழியர்கள் விரும்புகின்றனர்.