/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
l மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டட பணி கிடப்பில்
/
l மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டட பணி கிடப்பில்
l மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டட பணி கிடப்பில்
l மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டட பணி கிடப்பில்
ADDED : செப் 09, 2024 05:50 AM

மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆடி வெள்ளி கிழமைகளில் மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். கேட்கும் வரம் தருபவர், தவறு செய்தவர்களை தட்டி கேட்பவர் என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
மதுரை மாநகரின் எல்லையை கேட்ட போது சிவபெருமான் தனது கழுத்தில் கிடந்த பாம்பை தூக்கி எறிந்ததாகவும் எல்லையை காட்ட தலையும் வாலும் இணைந்த இடம் மடப்புரம் என அழைக்கின்றனர். பக்தர்களின் காணிக்கை மூலம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ரூ.40 லட்சம் வரை ஹிந்து அறநிலையத்துறைக்கு வருவாய் கிடைக்கிறது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில் பக்தர்கள் தங்கி வழிபட விடுதிகள் ஏதும் இல்லை. இதனையடுத்து கடந்த 2022 ஜூன் 10ம் தேதி கோயில் எதிரே 4 ஆயிரத்து 200 சதுர அடியில் ரூ.2.28 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி, வாகன நிறுத்துமிடம், வணிக வளாகம் கட்ட நிதி ஒதுக்கினர். அதற்கான பணிகளும் தொடங்கின.
கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே பணிகள் நிறைவடைந்து மின் இணைப்பிற்காக காத்து கிடந்தனர். மின் இணைப்பும் வழங்கப்பட்டு ஓராண்டாகியும் இன்று வரை பக்தர்கள் தங்கும் விடுதி திறக்கப்படவே இல்லை.
தரை தளத்தில் 20 கடைகள், முதல் தளத்தில் 7 அறைகள் கொண்ட இந்த வணிக வளாகம் திறக்கப்படாமலும், உரிய பராமரிப்பின்றி பாழடைந்து வருகிறது. எனவே ஹிந்து அறநிலையத்துறை நிர்வாகம் பக்தர்கள் தங்கும் விடுதி, வணிக வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.