/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை குற்றப்பிரிவில் போலீஸ் பற்றாக்குறை
/
சிவகங்கை குற்றப்பிரிவில் போலீஸ் பற்றாக்குறை
ADDED : செப் 18, 2024 06:26 AM
சிவகங்கை, : சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறை இருப்பதால் குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை பிடிப்பதில் சிக்கல் நிலவுகிறது.
சிவகங்கை நகரில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, போக்குவரத்து உள்ளிட்ட ஸ்டேஷன்கள் செயல்பட்டு வருகிறது. குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தலைமையில் 2 எஸ்.ஐ., 6 சிறப்பு .எஸ்.ஐ.,கள் உட்பட 7 போலீசார் பணிபுரிகின்றனர். இதில் இன்ஸ்பெக்டர் அயல் பணியில் மதுரை உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ளார். எஸ்.ஐ.,க்கள் இரண்டு பேரில் ஒருவர் கஞ்சா தடுப்பு டீமிலும், ஒருவர் சப் டிவிஷன் கிரைம் டீமிலும் உள்ளார். 3 சிறப்பு எஸ்.ஐ.,க்கள் மருத்துவ விடுப்பில் உள்ளனர். 2 சிறப்பு எஸ்.ஐ., 7 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர்.
இவர்கள் தான் இரவு ரோந்து உள்ளிட்ட ஸ்டேஷனுக்கு வரும் புகார்களை விசாரிக்க வேண்டும். அதிலும் நகர் குற்றப் பிரிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்தால் புகார் தாரர்களை மிரட்டும் தொனியில் போலீசார் பேசுவதாக புகார் உள்ளது. நகர் பகுதியில் டூவீலர் திருட்டு தொடர் கதையாக உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமாள் கோவில் தெரு பகுதியில் போலீசார் போல் நடித்து பெண்ணிடம் தங்க நகை பறிப்பு, தனியார் வங்கி வாசலில் பணம் திருட்டு, கடந்த வாரம் இந்திராநகரில் வீட்டில் தங்க நகை திருட்டு உள்ளிட்ட எந்த வழக்குகளிலும் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
நகரில் நடக்ககூடிய டூவீலர் திருட்டு, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

