/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாதிப்பு பொருட்கள் எடை குறைவால் நுகர்வோர் கண்காணிக்க ஊழியர்கள் பற்றாக்குறை
/
பாதிப்பு பொருட்கள் எடை குறைவால் நுகர்வோர் கண்காணிக்க ஊழியர்கள் பற்றாக்குறை
பாதிப்பு பொருட்கள் எடை குறைவால் நுகர்வோர் கண்காணிக்க ஊழியர்கள் பற்றாக்குறை
பாதிப்பு பொருட்கள் எடை குறைவால் நுகர்வோர் கண்காணிக்க ஊழியர்கள் பற்றாக்குறை
ADDED : செப் 13, 2024 05:21 AM
காரைக்குடி: காரைக்குடியில் எடைக்கற்கள், தராசுகளை ஆய்வு செய்ய ஊழியர்கள் இல்லாததால் உணவுப் பொருட்கள் உட்பட பல பொருட்களின் எடையில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
காரைக்குடி நகராட்சி தற்போது மாநகராட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கடைகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. காரைக்குடி மாநகராட்சியில் வணிக வளாகங்கள், சாலையோரக் கடைகள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தவிர வாரந்தோறும் வியாழன் கழனிவாசல் சந்தை, திங்கள் தோறும் கணேசபுரம் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு காரைக்குடிக்கு மட்டுமின்றி சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர்.
சந்தையில் அதிகாரிகள் ஆய்வு செய்யாததால் வாங்கும் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக மக்கள் புகார் கூறுகின்றனர். வியாபாரிகள் பயன்படுத்தும் தராசுகள் மற்றும் எடைக் கற்கள் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், முத்திரை ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்படும். இதன் மூலம் எடை மோசடி தடுக்கப்படும்.
ஆனால் காரைக்குடியில் உள்ள கடைகள், சந்தைகளில் முறையாக ஆய்வு நடைபெறவில்லை. முத்திரை ஆய்வாளர் அலுவலகத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால் ஆய்வுப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் புகாரை எழுதி கொடுத்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவிப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் முத்து கூறுகையில்:
புகார் குறித்து எழுதிக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது காரைக்குடியில், இரு ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர். முத்திரை ஆய்வாளர், வெளி ஆய்வு, பணம் செலுத்தும் பணிக்கு ஒரு ஆய்வாளர் என இருவர் மட்டுமே உள்ளனர். இரு ஆய்வாளர்களுக்கும் இரு உதவியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், இரு உதவியாளர்கள் பணியிடம் காலியாக உள்ளது. உதவியாளர்கள் இல்லாததால் பணியில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இனி முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.