ADDED : மார் 13, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் தமிழ்த்துறை சார்பில் கல்லுாரி நிறுவனர் அண்ணாமலை துவக்கி வைத்த மகா மகோபாத்தியாய பண்டிதமணி கதிரேசன் அறக்கட்டளையின் இலக்கிய சொற்பொழிவு ஆட்சிக்குழு தலைவர் லட்சுமணன் தலைமையில் நடந்தது.
தமிழ்த்துறை தலைவர் கண்ணதாசன் வரவேற்றார். பொருளியல் துறை தலைவர் பரமசிவன் தொடங்கி வைத்தார். ஆடிட்டர் சிவராமன் ராமநாதன் ,முன்னாள் தமிழ்த்துறை தலைவர் ஆறுமுகம், தமிழாசிரியர் துரைதமிழ்செல்வன் பேராசிரியர்கள், பங்கேற்றனர். உதவி பேராசிரியர் இளங்கோ தொகுத்து வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் உதவி பேராசிரியர் ரத்தினேஸ்வரி நன்றி கூறினார்.