/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொழில் வளம் பெற செய்வோம் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி
/
தொழில் வளம் பெற செய்வோம் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி
தொழில் வளம் பெற செய்வோம் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி
தொழில் வளம் பெற செய்வோம் : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பேட்டி
ADDED : மார் 27, 2024 06:35 AM

சிவகங்கை : தொழில் வளர்ச்சியின்றி காணப்படும் சிவகங்கை தொகுதியை வளம் பெற செய்வோம் என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி தெரிவித்தார்.
சிவகங்கையில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர் எழிலரசி நேற்று கலெக்டர் ஆஷா அஜித்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு மாற்று வேட்பாளராக இந்துஜா மனு தாக்கல் செய்தார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கோட்டைக்குமார், ரமேஷ், தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன், மண்டல செயலாளர் சாயல்ராம் உடனிருந்தனர். இவர் உட்பட3 சுயேச்சை வேட்பாளர்கள் நேற்று கலெக்டரிடம் மனு தாக்கல் செய்தனர்.
வேட்பாளர் எழிலரசி கூறியதாவது: இத்தொகுதியில் நாம் தமிழர் கட்சி, பிற கட்சியினர் இடையே தான் போட்டியாக பார்க்கிறோம். திராவிட, தேசிய ஆட்சியால் மிகுந்தவருத்தத்தில் மக்கள்உள்ளனர். நாம் தமிழர் கட்சி சின்னத்தை முடக்க செய்யும் நோக்கில் செயல்பட்ட கட்சிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. புதிய சின்னத்தால் நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளோம்.
தொகுதியில் விவசாய பாசன திட்டம் செயல்பாடின்றி கிடக்கிறது. கண்மாய், வரத்து கால்வாய்கள் துார்வாரி பாசன வசதியை செய்து தருவோம். சிவகங்கையில் தொழில் வளர்ச்சியே இல்லை. அதை கொண்டு வர முயற்சிப்போம்.
விவசாயத்தில் பனை சார்ந்த தொழில் வளர்ச்சி பெற செய்வோம். இளைஞர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். தலைவர் சீமான் அவசியம் சிவகங்கையில் பிரசாரம் செய்ய வருவார்.

