ADDED : செப் 04, 2024 12:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை : தேவகோட்டை கிளையில் எல்.ஐ.சி.,ஆண்டு விழா கிளை மேலாளர் சனில் ஜான் சன்னி தலைமையில் நடந்தது. உதவி மேலாளர் முத்துகுமரன் முன்னிலை வகித்தார். சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன், அலுவலக ஊழியர்கள் யூனியன் சார்பில் சொக்கலிங்கம், வளர்ச்சி அதிகாரி சார்பில் திருவேங்கடம், முகவர்கள் சார்பில் தயாநிதி, பாலிசிதாரர் சார்பில் சுமதி பேசினர்.
ஏ.ஓ. திருநாகசாமி , ஏ.ஏ.ஓ.ராஜகுரு , வளர்ச்சி அதிகாரி சச்சின், சீனியர் முகவர் வெங்கடாசலம் மற்றும் அலுவலக அதிகாரிகள், அலுவலர்கள், வளர்ச்சி அதிகாரிகள், முகவர்கள் பங்கேற்றனர்.