/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் மின் வாரியத்துடன் பழையூரை இணைப்பது கிடப்பில்: பொதுமக்கள் அவதி
/
திருப்புவனம் மின் வாரியத்துடன் பழையூரை இணைப்பது கிடப்பில்: பொதுமக்கள் அவதி
திருப்புவனம் மின் வாரியத்துடன் பழையூரை இணைப்பது கிடப்பில்: பொதுமக்கள் அவதி
திருப்புவனம் மின் வாரியத்துடன் பழையூரை இணைப்பது கிடப்பில்: பொதுமக்கள் அவதி
ADDED : மே 02, 2024 05:25 AM
திருப்புவனம்: திருப்புவனம் பழையூர் பகுதிக்கு நகர்ப்புற மின்வாரியத்துடன் இணைக்க வலியுறுத்தி 40 ஆண்டுகளுக்கும் மேலாக போராடியும் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனத்தில் இருந்து நரிக்குடி செல்லும் ரோட்டில் ரயில்வே ரோட்டை தாண்டிய உடன் நகரின் 10 மற்றும் 11வது வார்டைச் சேர்ந்த பழையூர் பகுதி அமைந்துள்ளது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இப்பகுதியில் புதுப்புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. மதுரை நகருக்கு வெகு அருகாமையில் இருப்பதாலும் நான்கு வழிச்சாலை அருகில் இருப்பதாலும் பொதுமக்கள் பலரும் புதிய வீடு கட்டி குடியேறி வருகின்றனர். பழையூரையும் திருப்புவனம் நகர்ப்பகுதியையும் மதுரை - ராமேஸ்வரம் அகல ரயில் பாதை பிரிக்கிறது.
ரயில் பாதைக்கு அடியில் கேபிள் மூலம் மின்சாரம் கொண்டு செல்ல ரயில்வே நிர்வாகம் அனுமதி தராததால் பழையூர் பகுதிக்கு திருப்புவனம் ஊரகப்பகுதி மின்வாரியம் மூலம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனால் குறைந்த மின்னழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ஐந்து முறைக்கு மேல் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. புதிய இணைப்பு, மின் பழுது உள்ளிட்டவற்றிற்காக ஊரகப்பகுதி மின்வாரியத்திற்கு அலைய வேண்டியுள்ளது.
இதனை தவிர்க்க நகர்ப்பகுதியுடன் இணைக்கவேண்டும் என பல ஆண்டு கால போராட்டத்திற்கு பின் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது ரயில்வே துறைக்கு குறிப்பிட்ட தொகை செலுத்தப்பட்டது. விரைவில் இணைப்பு பணி தொடங்கும் என கூறி தொடக்க விழாவும் நடந்தது.
தொடக்க விழா நடந்து 4 ஆண்டுகளாகியும் இன்று வரை நகர்ப்பகுதியுடன் இணைக்கும் பணி தொடங்கவே இல்லை. இதனால் பழையூர் பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

