நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: அகில உலக லயன்ஸ் சங்க மாவட்ட 324 பி 34வது மாவட்ட மாநாடு காரைக்குடியில் நடந்தது. மாவட்ட ஆளுனர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
முன்னாள் பன்னாட்டு இயக்குனர்கள் சங்கர், நாகராஜன் பேசினர். சிவகங்கை லயன்ஸ் சங்க மூத்த உறுப்பினர் முன்னாள் மண்டலத்தலைவர் தங்கமணிக்கு அரிமா சங்க சேவையை பாராட்டி அகில உலக லயன்ஸ் சங்கத் தலைவர் அனுப்பிய விருது வழங்கப்பட்டது. இந்த மாநாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை வருவாய் மாவட்டத்தை சேர்ந்த 175 சங்கங்களிலிருந்து 1500 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

