/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
' ‛ வேர்களை தேடி திட்டம்' வெளிநாட்டு மாணவர்கள் கானாடுகாத்தான் வருகை

ADDED : ஆக 08, 2024 04:49 AM

சிவகங்கை: முதல்வரின் 'வேர்களை தேடி' திட்டம் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த 115 மாணவர்கள் நேற்று கானாடுகாத்தான் பாரம்பரிய பங்களாவை பார்வையிட்டனர்.
முதல்வரின் வேர்களை தேடி திட்டம் மூலம் பல்வேறு பாரம்பரிய சுற்றுலா தலங்கள், தொல்லியல், ஹிந்து கோயில்களை பார்வையிட கனடா, தென் ஆப்பிரிக்கா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, மொரிஷியஸ், இந்தோனேசியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து 115 மாணவ, மாணவிகள் நேற்று கானாடுகாத்தான் பாரம்பரிய செட்டிநாடு பங்களாவை பார்வையிட்டு சென்றனர்.
இக்குழுவினர் ஆக., 12 அன்று கீழடி தொல்லியல் அகழ்வாராய்ச்சியை பார்வையிட உள்ளனர். தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, பேரூராட்சி தலைவர் ராதிகா, சுற்றுலா மாவட்ட அலுவலர் திருவாசன், காரைக்குடி தாசில்தார் ராஜா, செல்வராணி, உதவி சுற்றுலா அலுவலர் ஜான்சன் பங்கேற்றனர்.