/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் குறைந்த வி.ஐ.பி.க்கள் பிரசாரம்
/
திருப்புத்துாரில் குறைந்த வி.ஐ.பி.க்கள் பிரசாரம்
ADDED : ஏப் 17, 2024 05:33 AM
திருப்புத்துார், : திருப்புத்துாரில் தேர்தல் பிரசாரத்தை குறைவான அளவிலேயே கட்சிகளின் வி.ஐ.பி.க்கள் செய்தனர்.
வேட்பாளர்களின் நேரடி பிரசாரமே அதிகமாக காணப்பட்டது. வழக்கமாக லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் தேசிய, மாநில அளவிலான வி.ஐ.பி.,க்கள், பங்கேற்கும் பிரசாரம் திருப்புத்துாரில் நடைபெறும்.
நடிகர்கள், கட்சி பேச்சாளர்கள் வருகையும் காணப்படும். புதுக்கோட்டையிலிருந்து திருப்புத்துார் வழியாக மதுரை செல்வது போல முன்பு பிரசார வழி இருக்கும்.
தற்போது அந்நிலை மாறி விட்டது. தலைவர்களின் தொடர் பிரசார பயணம் என்பது இல்லாமல் போய் விட்டது. முதல்வர், முன்னாள் முதல்வர், தேசிய தலைவர்கள் யாரும் வரவில்லை.
இதனால் இந்த தேர்தல் பிரசாரத்தில் உள்ளூர் வி.ஐ.பி.க்களே அதிகமாக காணப்பட்டனர். திருப்புத்துாரில் நா.த.,வேட்பாளர் எழிலரசிக்கு சீமான் மட்டுமே வி.ஐ.பி.,யாக வந்து பிரசாரம் செய்தார். காங். வேட்பாளர் கார்த்திக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அமைச்சர் பெரியகருப்பன், காங்.,மாநில தலைவர் பெருந்தகை,நடிகர் கருணாஸ் ஆகியோரும், அ.தி.மு.க. வேட்பாளர் சேவியர்தாஸிற்கு முன்னாள் அமைச்சர் பாஸ்கரன்.
எம்.எல்.ஏ., செந்தில்நாதன், ஆகியோரின் பிரசாரம் நடந்தது. பா.ஜ., கூட்டணி வேட்பாளர் தேவநாதன் தன்னந்தனியாகவே பிரசாரக் களத்தில் காணப்பட்டார். இன்றுடன் பிரசாரம் நிறைவடையும் நிலையில் மிகவும் அமைதியான, குறிப்பாக மோதல்களின்றியே பிரசார களம் இருந்தது.

