/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வெளியூர் வாக்காளர் வருகைக் குறைவு
/
வெளியூர் வாக்காளர் வருகைக் குறைவு
ADDED : ஏப் 20, 2024 05:15 AM
திருப்புத்துார்: இந்த தேர்தலில் வெளியூர் வாக்காளர்கள் வருகை வெகுவாக குறைந்து காணப்பட்டது.
பெரும்பாலும் உள்ளாட்சி மற்றும் சட்ட சபைத் தேர்தல்களில் வெளியூர் வாக்காளர்களை சொந்த ஊருக்கு வரவழைப்பதில் வேட்பாளர்கள் கவனம் செலுத்துவர். ஆனால் லோக்சபா தொகுதியில் அது நடைமுறைச் 'சிரமம்' என்று தவிர்த்து விடுவார்கள்.
வழக்கமாக வெளியூர் வாக்காளர்கள் வந்து போகும் 'பயணப்படியை' தற்போது யாரும் கொடுக்கவில்லை. இம்முறை வெளியூர் வாக்காளர்களின் வருகை கடந்த தேர்தல்களை விட குறைவாகவே காணப்பட்டது.
மேலும் ஆண் வாக்காளர்களில் பலர் வெளிநாடு, வெளி மாநிலங்களில் பணியில் உள்ளதால், அவர்களும் வர முடியவில்லை.
இதனால் பெண்கள் ஓட்டுக்களே அதிகமாக பதிவாகியுள்ளது.

