/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தார்ப்பாய் மூடாமல் லாரியில் செல்லும் எம்.சாண்ட் மணல்
/
தார்ப்பாய் மூடாமல் லாரியில் செல்லும் எம்.சாண்ட் மணல்
தார்ப்பாய் மூடாமல் லாரியில் செல்லும் எம்.சாண்ட் மணல்
தார்ப்பாய் மூடாமல் லாரியில் செல்லும் எம்.சாண்ட் மணல்
ADDED : ஜூலை 23, 2024 05:15 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி பகுதியில் தார்ப்பாய் கொண்டு மூடாமல் டிப்பர் லாரியில் எம் சாண்ட் கொண்டு செல்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இவ்வொன்றியத்தில் ஜெயங்கொண்ட நிலை, மல்லாக்கோட்டை, பிரான்மலை உள்ளிட்ட பகுதிகளில் எம் சாண்ட் தயாரிக்கும் குவாரிகள், ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து பல்வேறு ஊர்களுக்கு டிப்பர் லாரிகளில் மணலை தார்ப்பாய் கொண்டு மூடாமல் கொண்டு செல்கின்றனர்.
இதனால் ரோட்டில் டூவீலர்களில் செல்வோரும் நடந்து செல்வோரும் மணல் தூசியால் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். கண்களில் தூசி பட்டு டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மேலும் இந்த மணல் லாரிகளால் சாலையில் மணல் தூசி கொட்டி படிந்து எந்நேரமும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே அனைத்து மணல் லாரிகளும் தார்ப்பாய் கொண்டு மூடி பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.