ADDED : ஏப் 12, 2024 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரையில் மார்க்சிஸ்ட் சார்பில் காங்., வேட்பாளர் கார்த்தியை ஆதரித்து நடந்த தெருமுனை பிரசார கூட்டங்களுக்கு ஒன்றிய செயலாளர் ஆண்டி தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முனியராஜ், விஜயகுமார், பரமாத்மா, முருகானந்தம், ராஜாராமன், பழனியப்பன், பாலு, முத்துராமலிங்கம் ஆகியோர் கன்னார்தெரு, சிப்காட், மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில், காந்திசிலை, நகராட்சி அலுவலகம் அருகில், அண்ணாத்துரை சிலை, மரக்கடை ஸ்டாப், ரயில்வே காலனி, சீனியப்பா லாட்ஜ், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் பிரசாரம் செய்தனர்.

