/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மகிபாலன்பட்டி மஞ்சுவிரட்டு: 37 பேர் காயம்
/
மகிபாலன்பட்டி மஞ்சுவிரட்டு: 37 பேர் காயம்
ADDED : ஏப் 23, 2024 11:49 PM

கண்டவராயன்பட்டி,- திருப்புத்துார் ஒன்றியம் மகிபாலன்பட்டியில் சித்ரா பவுர்ணமி பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் 350க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 37 பேர் காயமடைந்தனர்.
மகிபாலன்பட்டி பூங்குன்றநாயகி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெறும். விழாவை முன்னிட்டு நேற்று காலை மஞ்சுவிரட்டு நடந்தது.
காலை 10:45 மணிக்கு தொழுவிலிருந்து 350 காளைகள் அவிழ்க்கப்பட்டன.
தொழுவிற்கு வெளியே நுாற்றுக்கணக்கான காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்க்கப்பட்டன. சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து காளைகள் பங்கேற்றன. 150 மாடு பிடிவீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் 37 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேர் மேல்சிகிச்சைக்கு பொன்னமராவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

