நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: குமாரபட்டியில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடந்தது.வேளாண்மை உதவி இயக்குனர் வளர்மதி தலைமை வகித்தார்.
துணை இயக்குனர் (ஓய்வு) மணிவண்ணன் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி நோய் மேலாண்மை, உர மேலாண்மை குறித்து தெரிவித்தார். நெல்லை மதிப்பு கூட்டு பொருளாக மாற்றி அதிக லாபம் பெறுவது குறித்தும் விளக்கம் அளித்தனர். தொழில் நுட்ப உதவி மேலாளர் ராஜா பயிற்சி அளித்தார்.