/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு
/
மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு
மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு
மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா நிறைவு
ADDED : ஏப் 25, 2024 05:53 AM

மானாமதுரை : மானாமதுரையில் ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில் சித்திரை திருவிழா நேற்று இரவு சந்தன காப்பு உற்ஸவத்துடன் நிறைவு பெற்றது.
இக்கோயிலில் சித்திரைதிருவிழா ஏப்.14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ஏப்.19ம் தேதியும்,திருக்கல்யாணம் 21ம் தேதியும், மறுநாள் 22ம் தேதி தேரோட்டமும் நடைபெற்றது.
விழாக்களில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக நேற்று இரவு சுவாமிகளுக்கு சந்தனகாப்பு அலங்காரத்துடன் உட்பிரகாரத்தில் பக்தி உலாவுதல் நிகழ்ச்சியுடன் இந்தாண்டு சித்திரை திருவிழா நிறைவு பெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ கண்காணிப்பாளர் சீனிவாசன்,ஸ்தானீகர் சோமசுந்தரம், அர்ச்சகர்கள் ராஜேஷ், குமார், பரத்வாஜ் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.